photo happy-new-year-animation.gif

Monday 30 December 2013

இந்தியர்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் தேதியை கிருத்துவ ஆண்டின் துவக்கம் என்றும் கூறுவோம். ஆனால்,  க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாறியவுடன் பெரும்பாலான நாடுகள் ஜனவரி முதல் தேதியையே மீண்டும் ஆண்டுத் துவக்கமாகக் கொண்டன.
ஜூலியன் நாட்காட்டிக்கும் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் இடையில் ஒவ்வொரு நானூறு ஆண்டுகளுக்கும் மூன்று நாட்கள் வித்யாசம் உண்டு. க்ரிகேரியன் நாட்காட்டியில் 1700,1800,1900 ஆகிய ஆண்டுகள் லீப் வருடமாக இல்லாமல் சாதாரண ஆண்டாக (அதாவது, பிப்ரவரியில் 28 தேதிகளுடன் 365 நாட்கள் கொண்டு) இருக்கும். இதனால், கத்தோலிகத் திருச்சபையால் 16-ஆம் நூற்றாண்டில் (1582-இல்) ஜூலியன் நாட்காட்டியிலிருந்து 10-நாட்கள் நீக்கப்பட்டன. 1582-ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி (விழாயக் கிழமைக்கு) அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) என்று குறிக்கப்பட்டு க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் 17-18 ஆம் நூற்றாண்டில் தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் மாற்றம் செய்து கொண்டன.
ஆங்கில மொழியின் தாய்நாடான இங்கிலாந்தில் 1752-ஆம் ஆண்டு தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப் பட்டது. அப்பொழுது 11 நாட்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது.  11 நாட்களைத் திருப்பிக் கொடு’ என்பது போன்ற போராட்டங்களும் ஏற்பட மாற்றம் 1800-க்குத் தள்ளிப் போனது. (அப்பொழுது 12 நாட்கள் குறைக்க நேரிட்டது). பழைய நிதி ஆண்டின் துவக்கமான மார்ச்-25 (பெருமாட்டி தினம்) இலிருந்து ஏப்ரல் -6 ஆம் தேதிக்கு நிதி ஆண்டு மாற்றப்பட்டது.
ரஷ்யாவின் க்ரிகேரியன் ஆண்டு 1917-இல் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. கூறப்போனால் அதை அக்டோபர் புரட்சி என்பதே தவறு. ஏனெனில், புரட்சி நடந்தது ஜூலியன் வருடத்தின் அக்டோபர் மாதம்; ஆனால் க்ரிகேரியனில் அப்பொழுது நவம்பர் ஆரம்பம் ஆகிவிட்டது. 1918-இல் ஜனவரி-31 ஆம் தேதிக்குப் பின் பிப்ரவரி-14 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
எப்படி இருந்தாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் (மதச் சடங்குகளைத் தவிர்த்த விஷயங்களில்) இந்த க்ரிகேரியன் நாட்காட்டிகள் வழக்கத்திற்கு வந்துவிட்டபடியால் ஜனவரி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…
முதலில் புத்தாண்டு எப்பொழுதுத் துவங்குகிறது? என்பதைப் பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் புத்தாண்டு என்பது தைமாதம் துவங்குகிறதா? அல்லது சித்திரை மாதம் துவங்குகிறாதா? என்ற விவாதம் அனைத்து இடங்களிலும் நடப்பதைக் கண்டு வருகிறோம். அதே நேரம் ஆங்கிலப் புத்தாண்டு என்றால் அது ஜனவரி மாதம் முதல் தேதி என்று அனைவரும் எந்த பேதமும் இன்றிக் கொண்டாடுகிறோம்.
ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு என்பது ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தான் துவங்குகிறது என்பது நிச்சயமாகத் தெரியுமா? இதன் வரலாறு தான் என்ன?
சற்றுத் திரும்பிப் பார்ப்போம்…
ஆண்டு, மாதக் கணக்குகள் ஏதேனும் ஒரு நாட்காட்டியின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்காட்டி என்றவுடன் நாம் அது ஆங்கில மொழி தோன்றிய இங்கிலாந்தின் நாட்காட்டி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கூறப்போனால், இது ஆங்கில நாட்காட்டி என்பதைவிட இதைச் சர்வதேச நாட்காட்டி என்று தான் கூற வேண்டும். இது க்ரிகேரியன் நாட்காட்டி-யை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, தங்கள் நாட்டுக்கெனத் தனித்தனியே வெவ்வேறு நாட்காட்டிகளைக் கொண்ட நாடுகள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தகள் ஆகியவற்றுக்கு இந்த நாட்காட்டியையே பயன்படுத்துகின்றன.
இந்த க்ரிகேரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வந்ததே 16-ஆம் நூற்றாண்டில் தான். இது கிருஸ்துவர்கள் (குறிப்பாகக் கத்தோலிகர்கள்) தங்கள் ஈஸ்டர் பண்டிகையைச் சரியாகக் கணிக்க வடிவமைக்கப்பட்டது. முதலில் வெவ்வேறு கத்தோலிகக் குழுக்களாலேயே  நீண்ட சர்ச்சைக்குள்ளான இந்த நாட்காட்டி பின்னர் படிப்படியாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டது.
இது பெருமளவில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜூலியன் நாட்காட்டியின் அடிப்படையிலேயே (சில வேறுபாடுகளுடன்)த் தயாரிக்கப்பட்டது. கிமு-222 ஆண்டிற்கு முன் வரை புத்தாண்டு மே மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். கிமு-222 ஆண்டு முதல் கிமு.153 ஆம் ஆண்டு வரை புத்தாண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கிமு.153-ஆம் ஆண்டு முதல் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. கிமு.45 ஆம் ஆண்டு முதல் ஜுலியன் நாட்காட்டி அமலுக்கு வந்த பின்னரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசுகள் ஆண்டுத் துவக்கத்தை மாற்ற முயன்றும் (கணக்கு வழக்கு ஆண்டுகளை மாற்றிய போதும்) மக்களைப் பொறுத்தவரை பொது ஆண்டின் துவக்கம் ஜனவரி 1-ஆம் தேதியாகவே இருந்து வருகிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் தேதியை கிருத்துவ ஆண்டின் துவக்கம் என்றும் கூறுவோம். ஆனால், 10-17 நூற்றாண்டுகள் வரை பல்வேறு (ஐரோப்பிய) நாடுகள் கிருத்துவ மதாலயங்களின் ஈர்ப்பால்/தூண்டுதலால் தங்கள் நாடுகளின் ஆண்டு துவக்கத்தை டிஸம்பர்-25, மார்ச்-25 (தேவமாதா கருவுற்ற நாள்), ஈஸ்டர் ஆகிய நாட்களுக்கு மாற்ற முனைந்ததும் நடைபெற்றுள்ளது.  க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாறியவுடன் பெரும்பாலான நாடுகள் ஜனவரி முதல் தேதியையே மீண்டும் ஆண்டுத் துவக்கமாகக் கொண்டன.
 
. இதனால், கத்தோலிகத் திருச்சபையால் 16-ஆம் நூற்றாண்டில் (1582-இல்) ஜூலியன் நாட்காட்டியிலிருந்து 10-நாட்கள் நீக்கப்பட்டன. 1582-ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி (விழாயக் கிழமைக்கு) அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) என்று குறிக்கப்பட்டு க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் 17-18 ஆம் நூற்றாண்டில் தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் மாற்றம் செய்து கொண்டன.
ஆங்கில மொழியின் தாய்நாடான இங்கிலாந்தில் 1752-ஆம் ஆண்டு தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப் பட்டது. அப்பொழுது 11 நாட்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது.  11 நாட்களைத் திருப்பிக் கொடு’ என்பது போன்ற போராட்டங்களும் ஏற்பட மாற்றம் 1800-க்குத் தள்ளிப் போனது. (அப்பொழுது 12 நாட்கள் குறைக்க நேரிட்டது). பழைய நிதி ஆண்டின் துவக்கமான மார்ச்-25 (பெருமாட்டி தினம்) இலிருந்து ஏப்ரல் -6 ஆம் தேதிக்கு நிதி ஆண்டு மாற்றப்பட்டது.
ரஷ்யாவின் க்ரிகேரியன் ஆண்டு 1917-இல் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. கூறப்போனால் அதை அக்டோபர் புரட்சி என்பதே தவறு. ஏனெனில், புரட்சி நடந்தது ஜூலியன் வருடத்தின் அக்டோபர் மாதம்; ஆனால் க்ரிகேரியனில் அப்பொழுது நவம்பர் ஆரம்பம் ஆகிவிட்டது. 1918-இல் ஜனவரி-31 ஆம் தேதிக்குப் பின் பிப்ரவரி-14 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
எப்படி இருந்தாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் (மதச் சடங்குகளைத் தவிர்த்த விஷயங்களில்)
அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Sunday 29 December 2013

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு..!

Calendars
ஜனவரி 1, 2012 (2013)… ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…
இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…?
இதில்தான் ஒரு சந்தேகம்..!
ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும்…
ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாக கொண்டாடுகிறோம்…
தை 1 – தமிழ்ப் புத்தாண்டு
யுஹாதி – தெலுங்குப் புத்தாண்டு
முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு
இப்படி பல பல புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன.
குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!
ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
  • ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
  • பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
  • மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
  • ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர். (ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) சரி, விடுங்கள்! மேலே படியுங்கள்.
  • மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.
  • ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.
  • ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.
மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க…
இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது..
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.
அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது.
இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.
இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. கிறிஸ்தவர்களும் இதனைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2345முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

20.06.2011-த.ஆ-2042--மிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது? ஏன்? எப்படி? ஆராய்வோம் வாரீர்.
மாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.
கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.
உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.
அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.
அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…
முதலில் புத்தாண்டு எப்பொழுதுத் துவங்குகிறது? என்பதைப் பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் புத்தாண்டு என்பது தைமாதம் துவங்குகிறதா? அல்லது சித்திரை மாதம் துவங்குகிறாதா? என்ற விவாதம் அனைத்து இடங்களிலும் நடப்பதைக் கண்டு வருகிறோம். அதே நேரம் ஆங்கிலப் புத்தாண்டு என்றால் அது ஜனவரி மாதம் முதல் தேதி என்று அனைவரும் எந்த பேதமும் இன்றிக் கொண்டாடுகிறோம்.
ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு என்பது ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தான் துவங்குகிறது என்பது நிச்சயமாகத் தெரியுமா? இதன் வரலாறு தான் என்ன?
சற்றுத் திரும்பிப் பார்ப்போம்…
ஆண்டு, மாதக் கணக்குகள் ஏதேனும் ஒரு நாட்காட்டியின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்காட்டி என்றவுடன் நாம் அது ஆங்கில மொழி தோன்றிய இங்கிலாந்தின் நாட்காட்டி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கூறப்போனால், இது ஆங்கில நாட்காட்டி என்பதைவிட இதைச் சர்வதேச நாட்காட்டி என்று தான் கூற வேண்டும். இது க்ரிகேரியன் நாட்காட்டி-யை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, தங்கள் நாட்டுக்கெனத் தனித்தனியே வெவ்வேறு நாட்காட்டிகளைக் கொண்ட நாடுகள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தகள் ஆகியவற்றுக்கு இந்த நாட்காட்டியையே பயன்படுத்துகின்றன.
இந்த க்ரிகேரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வந்ததே 16-ஆம் நூற்றாண்டில் தான். இது கிருஸ்துவர்கள் (குறிப்பாகக் கத்தோலிகர்கள்) தங்கள் ஈஸ்டர் பண்டிகையைச் சரியாகக் கணிக்க வடிவமைக்கப்பட்டது. முதலில் வெவ்வேறு கத்தோலிகக் குழுக்களாலேயே  நீண்ட சர்ச்சைக்குள்ளான இந்த நாட்காட்டி பின்னர் படிப்படியாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டது.
இது பெருமளவில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜூலியன் நாட்காட்டியின் அடிப்படையிலேயே (சில வேறுபாடுகளுடன்)த் தயாரிக்கப்பட்டது. கிமு-222 ஆண்டிற்கு முன் வரை புத்தாண்டு மே மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். கிமு-222 ஆண்டு முதல் கிமு.153 ஆம் ஆண்டு வரை புத்தாண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கிமு.153-ஆம் ஆண்டு முதல் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. கிமு.45 ஆம் ஆண்டு முதல் ஜுலியன் நாட்காட்டி அமலுக்கு வந்த பின்னரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசுகள் ஆண்டுத் துவக்கத்தை மாற்ற முயன்றும் (கணக்கு வழக்கு ஆண்டுகளை மாற்றிய போதும்) மக்களைப் பொறுத்தவரை பொது ஆண்டின் துவக்கம் ஜனவரி 1-ஆம் தேதியாகவே இருந்து வருகிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் தேதியை கிருத்துவ ஆண்டின் துவக்கம் என்றும் கூறுவோம். ஆனால், 10-17 நூற்றாண்டுகள் வரை பல்வேறு (ஐரோப்பிய) நாடுகள் கிருத்துவ மதாலயங்களின் ஈர்ப்பால்/தூண்டுதலால் தங்கள் நாடுகளின் ஆண்டு துவக்கத்தை டிஸம்பர்-25, மார்ச்-25 (தேவமாதா கருவுற்ற நாள்), ஈஸ்டர் ஆகிய நாட்களுக்கு மாற்ற முனைந்ததும் நடைபெற்றுள்ளது.  க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாறியவுடன் பெரும்பாலான நாடுகள் ஜனவரி முதல் தேதியையே மீண்டும் ஆண்டுத் துவக்கமாகக் கொண்டன.
ஜூலியன் நாட்காட்டிக்கும் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் இடையில் ஒவ்வொரு நானூறு ஆண்டுகளுக்கும் மூன்று நாட்கள் வித்யாசம் உண்டு. க்ரிகேரியன் நாட்காட்டியில் 1700,1800,1900 ஆகிய ஆண்டுகள் லீப் வருடமாக இல்லாமல் சாதாரண ஆண்டாக (அதாவது, பிப்ரவரியில் 28 தேதிகளுடன் 365 நாட்கள் கொண்டு) இருக்கும். இதனால், கத்தோலிகத் திருச்சபையால் 16-ஆம் நூற்றாண்டில் (1582-இல்) ஜூலியன் நாட்காட்டியிலிருந்து 10-நாட்கள் நீக்கப்பட்டன. 1582-ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி (விழாயக் கிழமைக்கு) அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) என்று குறிக்கப்பட்டு க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் 17-18 ஆம் நூற்றாண்டில் தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் மாற்றம் செய்து கொண்டன.
ஆங்கில மொழியின் தாய்நாடான இங்கிலாந்தில் 1752-ஆம் ஆண்டு தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப் பட்டது. அப்பொழுது 11 நாட்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது.  11 நாட்களைத் திருப்பிக் கொடு’ என்பது போன்ற போராட்டங்களும் ஏற்பட மாற்றம் 1800-க்குத் தள்ளிப் போனது. (அப்பொழுது 12 நாட்கள் குறைக்க நேரிட்டது). பழைய நிதி ஆண்டின் துவக்கமான மார்ச்-25 (பெருமாட்டி தினம்) இலிருந்து ஏப்ரல் -6 ஆம் தேதிக்கு நிதி ஆண்டு மாற்றப்பட்டது.
ரஷ்யாவின் க்ரிகேரியன் ஆண்டு 1917-இல் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. கூறப்போனால் அதை அக்டோபர் புரட்சி என்பதே தவறு. ஏனெனில், புரட்சி நடந்தது ஜூலியன் வருடத்தின் அக்டோபர் மாதம்; ஆனால் க்ரிகேரியனில் அப்பொழுது நவம்பர் ஆரம்பம் ஆகிவிட்டது. 1918-இல் ஜனவரி-31 ஆம் தேதிக்குப் பின் பிப்ரவரி-14 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
எப்படி இருந்தாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் (மதச் சடங்குகளைத் தவிர்த்த விஷயங்களில்) இந்த க்ரிகேரியன் நாட்காட்டிகள் வழக்கத்திற்கு வந்துவிட்டபடியால் ஜனவரி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Tuesday 24 December 2013

 " முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்"  பிறந்தநாள்         
                                                இன்று:
    
பிறப்பு: 25 டிசம்பர் 1924   இடம்:குவாலியர்( மத்திய பிரதேசம்)
                            
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு:

பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) என்னும் இடத்தில், கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும்  பள்ளி ஆசிரியர் ஆவார்.

 கல்வி:

குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.

ஆரம்பகாலப் பணிகள்:

தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார். இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

அரசியல் பிரவேசம்:

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து

மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார். அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து, அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.

பிரதமராக வாஜ்பாய்:

1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார். இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார். 1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நியமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.

கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று, அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.

மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.

எழுத்தாளராக வாஜ்பாய்:

அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.

விருதுகள்:

    1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
    1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார்.
    1994 – ‘லோகமான்ய திலகர் விருது’
    1994 –  ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது.
    1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார்.

Tuesday 22 October 2013

குஜராத்: 90% முஸ்லிம்கள் வாழும் நகராட்சியை கைப்பற்றிய பாஜக Posted by: Mathi Updated: Wednesday, February 13, 2013, 10:01 [IST] Ads by Google அகமதாபாத்: குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் துவாரகா மாவட்டத்தில் சலாயா என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நகராட்சியை பாஜக கைப்பற்றியிருக்கிறது. குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இத்தேர்தலில் 90% முஸ்லிம்கள் வசிக்கக் கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பாஜக போட்டியிட்டது. 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது. வாக்குப் பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். 23 வார்டுகளில் காங்கிரஸும் பாஜகவும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. அத்துடன் 3 வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்திருக்கிறது. சலாயாவில்தான் எஸ்ஸார் நிறுவனத்தின் முதலாவது அனல் மின் நிலையம் செயல்படுகிறது. இதன் மூலம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் பெரும்பகுதியான மின்சாரமும் குஜராத் மாநில அரசுக்கே விற்பனை செய்யப்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/12/india-modi-sweep-muslim-majority-town-elects-bjp-candidates-169661.html

013 23:51
90% முஸ்லிம்கள் வசிக்கும்  சலாயா நகராட்சியை கைப்பற்றிய பாஜக  குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான நகராட்சிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதில் துவாரகா மாவட்டத்தில் உள்ள சலாயா என்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது .

90% முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பா.ஜ.க போட்டியிட்டது. இதில் 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு வேட்பாளர்களை நிறுத்தியது . வாக்கு பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றனர். 23 வார்டுகளில் காங்கிரஸும் பா.ஜ.க.,வும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ்கட்சி படுதோல்வியை சந்தித்தது அத்துடன் மூன்று வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளது.

Tuesday 15 October 2013

வன்தட்டு (Hard Disk) டிரைவ்களை பிரிக்கும் முறை (Hard Disk Drive Partition)

கம்ப்யூட்டரில் இருக்கும் டிரைவ்களை ஒன்றுக்கு மேல் பிரிக்கும் முறையை தான் இங்கே பார்க்க போகிறோம். நாம் கம்ப்யூட்டரில் நமக்கு வேண்டிய பைல்களை (C,D,E) என பிரித்து இருக்கும் டிரைவ்களில் சேமித்து வைத்துகொள்வோம். ஆனால் சில கம்ப்யூட்டர்களில் ஒரே ஒரு டிரைவ் (C:) மட்டுமே இருக்கும். இப்பொழுது வெளியாகும் புதிய லேப்டாப்களில் ஒரே ஒரு டிரைவ் மட்டுமே இருப்பதை அதிகமாக காணமுடிகிறது. புரோக்ராம்கள் இருக்கும் அதே டிரைவ்களில் சேமித்து வைத்தோமேயனால் சில சமயங்களில் முக்கிய பைல்கலையோ, புரோக்ராம்களை இழக்க நேரிடும். காரணம் நம்மளை அறியாமலேயே டெலீட் கூட செய்ய நேரிடும். ஏதேனும் வைரஸ் தாக்கினால் முழு டிரைவும் பாதிப்புக்கு ஆளாகிவிடும். டிரைவை பார்மட் செய்யவும் முடியாது. ஏனென்றால் விண்டோஸ் அதே டிரைவில் இருப்பதால் பார்மட் செய்ய முடியாது. விண்டோஸ் இயங்க உதவும் பைல்களும் அழிந்தால் முழு விண்டோஸூம் கேடாகிவிடும்.

நமக்கு வேண்டிய அளவிற்கு டிரைவ்களை பிரித்து வைத்துகொண்டால் மிக மிக பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். இதற்கு எந்த மென்பொருட்களும் தேவையில்லை. மிக எளிதாக இரண்டே நிமிடத்தில் பிரித்து விடலாம்.

  • கம்ப்யூட்டர் என்று ஷார்ட்கட்டில் வலது பக்க மௌஸ் கிளிக் செய்யுங்கள்.

  • மேனேஜ் என்று இருக்கும் இடத்தை கிளிக் செய்யுங்கள்.

  • My Computer --> Right Click --> Manage

  • (Control Panel --> Administrative Tools --> Computer Management --> Disk Management)

  • கம்ப்யூட்டர் மேலான்மை என்று அழைக்கப்படும் Computer Management ஓபன் ஆகும்.
  • Disk Management என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • Computer Management --> Disk Management

  • Disk Management கிளிக் செய்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் டிரைவ்கள் அனைத்தும் காண்பிக்கும்.
(ஏற்கனவே நான் பிரித்து வைத்து இருப்பதால் E: என்று காண்பிக்கிறது)
  • ஒரே ஒரு டிரைவ் இருக்கும் பட்சத்தில் C: என்று காண்பிக்கும்.
  • C : மேல் ரைட் கிளிக் செய்யுங்கள்.
  • அதில் வரும் ஆப்சன்களில் Shrink Volume என்பதை கிளிக் செய்யவும்.
C : --> Right Click --> Shrink Volume
  • கிளிக் செய்தவுடன் பிரிக்க கூடிய அளவினை தானாகவே காண்பிக்கும்.
  • காண்பிக்கப்படும் அளவை விட அதிகரிக்க முடியாது. வேண்டுமேயானால் குறைத்து கொள்ளலாம்.
  • Shrink என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • புதிதாக ஒரு டிரைவ் C : அருகில் சேர்ந்து இருக்கும். புதிய டிரைவில் ரைட் கிளிக்  செய்து வரும் ஆப்சனில் New Simple Volume என்பதை கிளிக் செய்யுங்கள். 
  • அடுத்து வரும் ஆப்சன்ஸ் அனைத்திற்கும் Next என்றே கொடுத்துவிடுங்கள். கடைசியாக Finish என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • Right Click --> New Simple Volume --> Next --> Finish
  • அவ்வளவு தான் புதியதாக ஒரு டிரைவ் கம்ப்யூட்டரில் சேர்ந்துவிட்டது. 
  • புதிய டிரைவில் ரைட் கிளிக் செய்து பார்மட் செய்து கொள்ளுங்கள். 
  • New Drive --> Right Click --> Format
 இரண்டே நிமிடத்தில் புதிய டிரைவ் தயாராகிவிட்டது. (ஆனால் இந்த பதிவை எழுத தான் ஒரு மணி நேரம் ஆயுடுச்சி...?) இப்போ உங்கள் கம்ப்யூட்டரில் புதிய டிரைவ் இருக்கும். இதில் தங்களுக்கு வேண்டியவற்றை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
பிரித்த டிரைவ்களை அழிக்கும்  முறை
  • நீங்கள் பிரித்து வைத்து இருக்கும் டிரைவை திரும்ப இணைக்கவும் முடியும். 
  • பிரித்து வைத்து இருக்கும் டிரைவை இணைக்கும் முன் அதில் இருக்கும் பைல்களை வேறொரு டிரைவில் காப்பி செய்துகொள்ளுங்கள்.
  • இணைக்க அல்லது அழிக்க நினைக்கும் டிரைவை ரைட் கிளிக் செய்யுங்கள்.
  • அதில் வரும் ஆப்சனில் Delete Volume என்பதை கிளிக் செய்யவும். Next என்று கிளிக் செய்து Finish என்பதை கிளிக் செய்யவும்.
  • New Drive --> Right Click --> Delete Volume

  • எந்த டிரைவில் இருந்து பிரித்தீர்களோ அந்த டிரைவில் ரைட் கிளிக் செய்யுங்கள். (Delete செய்த டிரைவை அல்ல)

(C : என்ற டிரைவில் இருந்து பிரித்தால் C : ரைட் கிளிக் செய்யவும்)
 (புகைப்படத்தில் நான் E: டிரைவில் இருந்து பிரித்து இருக்கிறேன்)
  • ரைட் கிளிக் செய்து வரும் ஆப்சனில் Extend Volume என்பதை கிளிக் செய்யவும். Next கொடுத்து  Finish செய்து கொள்ளுங்கள்.
  • C : --> Right Click --> Extend Volume --> Next --> Finish

பிரித்து வைத்து இருந்த டிரைவ் ஏற்கனவே இருக்கும் ட்ரைவோடு சேர்ந்து இருக்கும். 
குறிப்பு : C : டிரைவை ஒரு தடவை மட்டுமே பிரிக்க முடியும். பிரித்த ட்ரைவ்களில் வேண்டுமானால் மேற்கொண்டு டிரைவ்களை பிரித்துகொள்ளலாம்.